வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடும் பாதிப்புக்களை சந்தித்தன.
தொடர் மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. தமிழ்நாட்டிற்கு வந்துள்ள மத்திய குழு, மழை பாதிப்புக்களை நேரில் ஆய்வு செய்தது.
இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்திலிருந்து இன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.








