மழை வேண்டி சிறப்புத் தொழுகை- ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று வழிபாடு!

திருப்பூரில் மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறப்பு கூட்டத் தொழுகையில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின்…

திருப்பூரில் மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறப்பு கூட்டத்
தொழுகையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சிலநாட்களாகவே பல இடங்களில் வெயில் சதமடித்து 100டிகிரியை கடந்துள்ளது. அதிகபட்சமான ஈரோட்டில் வெயில் 107டிகிரியை கடந்து வருவதால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கோடை வெயிலின் காரணமாக முக்கியமான நீர்த்தேக்கங்களில் கடந்தை ஆண்டைவிட இந்த ஆண்டு கொள்ளளவு குறைந்துள்ளது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறையவும் மழை வேண்டியும் திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர்.   இஸ்லாமியர்களின் இறைத்தூதரான முகமது நபிகள் (ஸல்) கடுமையான வறட்சி காலங்கள் மற்றும் மழை இல்லாத நேரத்தில் ஒரு பெரிய  திடலுக்குச் சென்று மழை வேண்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார்.

அதனை பின்பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் இன்று சிறப்பு தொழுகையில்  தொழுகையில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.