கொரோனா தொற்று ஒழிய வேண்டி இலங்கையில் சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றன.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றுக் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப் படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்று ஒழிய வேண்டி, இலங்கையில் சிறப்பு வழிபாடு கள் நடைபெற்றன. இலங்கை யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு, இலங்கையிலும் இந்தியாவிலும் கொரோனா தொற்று ஒழிய வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதேபோல் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இந்த நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்திய மக்கள் கொரோனாவில் இருந்து விடுபட வேண்டும் என பிரார்த்தனை செய்து இலங்கை பிரதமர் எழுதிய கடிதங்கள், வழிபாடுகளின் முடிவில் இந்திய துணைத் தூதரிடம் வழங்கப்பட்டன.







