தமிழகத்தில் உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்குப் பேருந்து கட்டணம் இலவசம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நகைப்பூட்டும் பல மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வலம் வருகின்றன. இதில் சிலவற்றின் தொகுப்பை இங்கே காணலாம்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சியமைத்தது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றதும் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கொரோனா போன்ற இக்கட்டான சூழலில் அவர் பதவியேற்றபோது, முதல்வர் அறிவிக்கும் அறிவிப்பின் மீது மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

அவர் கையெழுத்திட்ட கோப்புகளில் முக்கியமாகப் பார்க்கப்பட்டது பெண்களுக்கு உள்ளூர் பேருந்துகளில் கட்டணம் இல்லை என்பதுதான். மேலும் பெண்கள் என்றால் திருநங்கைகளும் அடங்குவர் என்பதை, முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்து விளக்கினார். இந்த அதிரடி அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.

வழக்கம்போல் நெட்டிசன்களும் தங்களது, நகைச்சுவை தன்மையையும் படைப்பாற்றலையும் மீம்ஸ் மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.







