பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்!

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில், பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் மார்பக புற்று நோய் கண்டறியும் சோதனையானது…

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில், பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் மார்பக புற்று நோய் கண்டறியும் சோதனையானது வடசென்னை பகுதியில் முதல் முறையாக நடத்தப்பட்டது. மேலும் பல் மருத்துவம், கண் சிகிச்சை, முழு உடல் பரிசோதனையும் ரத்த தான முகாமும் நடத்தப்பட்டது.

அதனைதொடர்ந்து லைப் லைன் ஹாஸ்பிடல் வேல்ஸ் கேர் மருத்துவக் குழுவினர் கே.ஆர்.வி கல்வி அறக்கட்டளை சார்பில், நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

இதில், பாஜக மாநில செயலாளர் வினோஜ் P செல்வம், பாஜக மாநிலத் துணைத் தலைவர் சக்கரவர்த்தி, தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் சையது இப்ராஹிம், கே.ஆர்.வி கல்வி அறக்கட்டளை தலைவர் வெங்கடேசன், பொதுச்செயலாளர் M.P நரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.