ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன்
வெகு சிறப்பாக தொடங்கியது.
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் (பெருமாள்) கோயிலில் புரட்டாசி மாதம் தோ்த்திருவிழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயிலில் யாகசாலை பூஜை, திருமஞ்சனம் நடைபெற்றது.
விழாவையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். காலை 7.15 மணிக்கு தேரில் பெருமாள் எழுந்தருளி தேரோட்டம் கோயிலில் இருந்து தொடங்கி ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, பன்னீா்செல்வம் பூங்கா, பெரிய மாரியம்மன் கோயில், காந்திஜி வீதி வழியாக சென்று மீண்டும் கோயிலில் நிலை வந்தடைகிறது.
அதனைத் தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமியின் திருவீதி உலா நடைபெறும். நாளை மாலை 6 மணிக்கு சேஷ வாகனத்தில் தெப்ப
உற்சவம் கோயிலின் தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது. 29-ஆம் தேதி இரவு 7 மணிக்கு
ஆஞ்சநேயா் சுவாமிக்கு வடை மாலை சாற்றப்பட்டு அன்றைய தினம் நடக்கும்
தீா்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
ரெ. வீரம்மாதேவி







