நாளை முதல் சபரிமலைக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை முதல் அடுத்த மாதம் 27-ம் தேதி வரை மொத்தம் 41 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும். இதனை முன்னிட்டு இன்று ( 16.11.2022 )மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தரிசனத்திற்குச் சிறு வழிப்பாதை, பெரு வழிப்பாதை என அனைத்து பாதைகள் வழியாகவும் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.இந்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்படவுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு அறிவித்துள்ளார்.
மேலும், நாளை முதல் 20.01.2023 வரை அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள், குளிர்சாதனமில்லா பேருந்துகள் சபரிமலைக்குத் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படுகிறது.
இந்த பேருந்துகளின் முன்பதிவுகள் http://www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள 94450 14452, 94450 17793 என்ற தொலைப்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.