சரியாக படிக்காததால் கண்டித்த தந்தை; தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மகள்!

சென்னை பம்மல் அருகே தந்தை கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பம்மல் அடுத்த பாரதியார் தெருவை சேர்நதவர் விநாயகம். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும்…

சென்னை பம்மல் அருகே தந்தை கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பம்மல் அடுத்த பாரதியார் தெருவை சேர்நதவர் விநாயகம். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் . மூன்றாவது மகளான ஜனனி (17) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜனனி சரியாக படிக்காததால் தந்தை கண்டித்தாகவும் இதனால் தனது மகளிடம் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலில் இருந்த ஜனனி இன்று அதிகாலை தனது அறையில் புடவையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்
கொண்டுள்ளார். இதனையடுத்து ஜனனி தூக்கில் தொங்கியதை கண்ட பெற்றோர் உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜனனி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உயிருக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply