கொரோனா தொற்றால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள இந்தியாவுக்கு உதவிடும் வகையில், தென்கொரியா அனுப்பி வைத்த மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தன.
230 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்ப உள்ளதாக தென்கொரியா அறிவித்தது. 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 30 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவை கடந்த ஞாயிறன்று இந்தியா வந்தடைந்தன.
இதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை மற்றொரு தொகுப்பு மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தன. அதில் 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஸ்ட்ரெச்சர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், கையுறைகள் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டன. நெருக்கடியான தருணத்தில் இந்தியாவுடன் சியோல் துணைநிற்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்த நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் நன்றி தெரிவித்துள்ளது







