முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை: முதலமைச்சர் வழங்கினார்

சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் 2018, 2019, 2020 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த எழுத்தாளர்களுக்கான பரிசு தொகை இன்று வழங்கப்பட்டது.

சிறந்த படைப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்ட முனைவர் ந. அறிவரசன் (கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழி நடையும்), எஸ். வசந்தா (திருக்குறளில் பௌத்தம்), எம்.பிரேம்குமார் (மாமன்னர் அசோகர்), முனைவர் சு.அ. அன்னையப்பன் (தொண்டை மண்டலப் பண்பாட்டில் திரௌபதியம்மன்), சு.சுகிர்தராஜா (வஞ்சிக்கப்பட்டவனின் வாய்க்கரிசி), இரா.கலாராணி (பௌத்த தியானம்), திருமதி.​டி.மோனிகா, (பேரறிஞர் அம்பேத்கர்), மு. ரமேஷ் (சங்க இலக்கியத்தில் நிலங்கள், குடிகள், வழிபாடுகள்), கே. பரமேஸ்வரி ​(தடை அதை உடை புதிய சரித்திரம் படை – உளவியல் கட்டுரை), ​அன்பாதவன் (இப்போதும் ஓடிக் கொண்டிருக்கும்குதிரை), ம. இளங்கோவன் (தமிழரின் பண்பாட்டுப்பதிவுகள்) ஆகியோருக்கும்

2019-2020 ஆம் ஆண்டிற்கான சிறந்தபடைப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்ட அ. கருப்பையன் (தடையும் ஒரு நாள் உடையும்), ச. சண்முகசுந்தரம் (குப்பத்து ராஜாக்கள்), முனைவர் க. மோகன் (உயிர்த்தாள் உயிர் நீங்கினாள்), எ. பாரதிராஜா (வெற்றி முழக்கங்கள்), செ. காளிமுத்து (தமிழ் இலக்கியங்களில் மருத்துவம்), அன்டனூர் சுரா (எத்திசை செலினும்), மீனாசுந்தர் என்கிற மா. மீனாட்சி சுந்தரம் (படைப்பு வெளியில் பதியும் பார்வைகள்), ஆர். கமலம் சின்னசாமி (நலம் தரும் நாட்டு வைத்தியம்), முனைவர் ம. ராஜா (உலக மயமாக்கல் சூழலில் நாட்டுப்புறக் கலைகள்-ஓர் பன்முகப் பார்வை – கட்டுரைத் தொகுப்பு), மு.வெ. ஆடலரசு (இசை மொழியும், ஆதி இனமும்) ஆகிய 21 எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் முதல் தவணைத் தொகையாக தலா இருபதாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.

இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Advertisement:
SHARE

Related posts

தொலைநோக்கு சிந்தனை கொண்டவர் பிரதமர் மோடி; எல்.முருகன்

Saravana Kumar

ஊரடங்கு முடியும்வரை, பராமரிப்பு பணிகளுக்கான மின் தடை இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி

Halley karthi

கொரோனா தடுப்பூசியை விரைவாக வழங்க வேண்டும்: பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம்

Halley karthi