தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் தீ விபத்தில் உயிரிழப்பு 73-ஆக உயர்வு! மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 5 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 அக உயர்ந்துள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள 5 மாடிக் கட்டத்தில் நள்ளிரவு 1.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து…

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 5 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 அக உயர்ந்துள்ளது.

ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள 5 மாடிக் கட்டத்தில் நள்ளிரவு 1.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 73 பேர் பலியாகியுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடர்ந்து கட்டடத்துக்குள் தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது.

உயிரிழந்தோரின் உடல்களும், தீ காயத்துக்கு ஆளானோரும் தெருக்களில் கிடத்தப்பட்டிருந்தது காண்போரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. கட்டடம் ஒரு ஒழுங்கற்ற வடிவமைப்பில் இருந்ததால், தீ விபத்து நேரிட்டபோது பலரும் கட்டடத்துக்குள்ளேயே சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.

ஜோகன்னஸ்பர்க்கில், குறிப்பாக ஏழ்மையான பகுதிகளில் வீடுகளில் தீ விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இங்கு மின் பற்றாக்குறையால், பலர் ஒளிக்காக மெழுகுவர்த்திகளையும், வெப்பத்திற்காக விறகு தீயையும் நாடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். ஏழ்மையான நகரங்களில் ஒன்றான அலெக்ஸாண்ட்ராவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல தீவிபத்துகள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்துவது எதிர்காலத்தில் இதுபோன்ற சோகம் நிகழாமல் தடுக்க உதவும் என்று நம்புவதாக அதிபர் சிரில் ரமபோசா கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.