தென் ஆப்பிரிக்காவின் வாசுலு நட்டல் மாகாணம் டர்பன் நகரில் உள்ள மலைப்பகுதியில் இந்து மத வழிபாட்டு தலமான நரசிம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளது. கட்டுமான பணியின் போது 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்ததுள்ளனர்.
அப்போது கட்டுமான பணியின்போது திடீரென கோவில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், பக்தர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.
இதில் விக்கி ஜெய்ராஜ் என்ற இந்தியரும் உள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுனர். மேலும் இடிபாடுகளுக்குள் ஒரு நபர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.







