பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் இந்திய அணியின் கேப்டனாகவும் இன்னாள் பிசிசிஐ தலைவராகவும் இருப்பவர் செளரவ் கங்குலி. இவருக்கு இன்று காலை வீட்டில் உடல் பயிற்சி மேற்கொண்டிருந்த போது தீடிரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து செளரவ் கங்குலி கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே கங்குலி குணமடைய அவரது ரசிகர்களும் விளையாட்டு வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மேற்கு வந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைய கடவுளை பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் பிசிசிஐ செயலாளர் ஜெ ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கங்குலி விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன். நான் அவரது குடும்பத்தினரிடன் பேசினேன், அவரது உடல் நிலை சீராக உள்ளது, சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.







