முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

’நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு..’ – செளந்தர்யாவை மறக்காத ரசிகர்கள்

சினிமா, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய முகங்களை இறக்குமதி செய்கிறது. அதில் சில முகங்கள் மட்டுமே நடிப்பாலும் அழகாலும் ரசிகர்கள் நெஞ்சில், பசைப் போட்டு ஒட்டிக்கொள்கின்றன. அப்படி அச்சாக ஒட்டிக்கொண்ட முகங்களில் ஒன்று, செளந்தர்யாவினுடையது.

சவும்யா என்ற இயற்பெயரைக் கொண்ட செளந்தர்யாவின் தந்தை கன்னடப் திரைப்பட தயாரிப்பாளர் என்பதால், சினிமா வாய்ப்பு அவருக்கு எளிதாகிவிட்டது. எம்.பி.பி.எஸ் படித்துக் கொண்டிருந்த செளந்தர்யா, முதல் வருடத்தோடு படிப்புக்கு மூட்டை கட்டிவிட்டு, கந்தர்வா என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார். அந்த ஒரே படம், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவுக்கும் அவரை அழைத்து வந்துவிட, பிசியான நடிகையானார். கன்னடம், தெலுங்கு தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கத் தொடங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் அவருக்கு மறக்க முடியாத படங்கள் அமைந்தன. இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் அவரை ’பொன்னுமணி’ மூலமாக தமிழுக்கு அழைத்து வந்தார். அந்தப் படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஜோடியாக,போட்டி போட்டு நடித்திருந்தார் செளந்தர்யா. அந்த முதல் தமிழ்ப்படமே அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. அந்தப் படத்தில் தனது முதுகில் செளந்தர்யாவை சுமந்துகொண்டு கார்த்திக் பாடும், ’நெஞ்சுக்குள்ள இன்னாரென்று சொன்னா புரியுமா?’ பாடல், இன்றுவரை அவர் பெயர் சொல்லிக் கொண்டி ருக்கிறது.

ரஜினிகாந்த் ஜோடியாக அருணாச்சலம், படையப்பா, கமல்ஹாசனுடன் காதலா, காதலா உட்பட பல படங்களில் நடித்த செளந்தர்யா, இந்தியில் அமிதாப்பச்சனுடன் சூர்யவன்ஷம் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

தனது உறவினரான ரகு என்பவரை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட செளந்தர் யா, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக, பெங்களூருவில் இருந்து தெலங்கானாவின் கரீம் நகருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். விபத்தில் சிக்கியதில் தனது சகோதரர் அமர்நாத்துடன் உயிரிழந்தார், சவுந்தர்யா.

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், செளந்தர்யா பற்றி ஒரு முறை சொன்னார், ‘இந்திய சினிமாவின் முழுமையான நடிகை’ என்று. உண்மைதான். தனது 31 வயதில் செளந்தர்யா உயிரிழந்துவிட்டாலும் அவர் நடித்த படங்கள், அவரை இன்னும் வாழ வைத்துக்கொண்டே இருக்கின்றன. அவருக்கு இன்று பிறந்தநாள். அவரை மறக்காத ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“வருடத்திற்கு ஆறு சமையல் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்”: அமைச்சர் சரோஜா

Halley Karthik

மழை நீர் முழுவதும் இன்று மாலைக்குள் அகற்றப்படும்; ககன்தீப் சிங் பேடி

EZHILARASAN D

ஜப்பானில் வெளியாகிறது கார்த்தியின் ’கைதி’

Halley Karthik