ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்கப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது.
நட்சத்திர தம்பதிகளான நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரியப்போவதாக கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியளித்தது. எனினும், அந்த அறிவிப்பு வந்த சில நாட்களிலே இருவரும் தத்தமது பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.
நடிகர் தனுஷ் நானே வருவேன், வாத்தி, ஆயிரத்தில் ஒருவன் 2 என பல படங்களில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு புதிய மியூஸிக் வீடியோவை இயக்கியுள்ளார். அந்த மியூசிக் வீடியோவின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்து, அவர் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும், இந்த திரைப்படத்திற்கு தயாரிப்பு தரப்பில் நடிகர் சிம்புவை கதாநாயகனாக தேர்வு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தத் தகவலை சிம்பு அல்லது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பிலிருந்து யாரும் உறுதிப்படுத்தவில்லை.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘3’ மற்றும் கவுதம் கார்த்திக்கை வைத்து ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.







