#Kanguva படத்தின் ‘மன்னிப்பு’ பாடல் குறித்த அப்டேட் வெளியீடு!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படத்தின் ‘மன்னிப்பு’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும்…

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படத்தின் ‘மன்னிப்பு’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகியது. இத்திரைப்படம் வருகிற 14ம் தேதி வெளியாகும் என கங்குவா தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் படக்குழுவினர் மும்பை, டெல்லி, கொச்சி போன்ற இடங்களில் திரைப்படத்தின் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் அதிகமாகி வருகிறது.

இதையும் படியுங்கள் : ProKabaddiLeague | பெங்கால் வாரியர்ஸ் – தபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்!

இப்படம் வெளியாக இன்னும் சரியாக 7 நாட்கள் உள்ளன. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் இன்று மாலை 6 மணியளவில் ‘மன்னிப்பு’ என்ற அடுத்த பாடல் வெளியாக உள்ளது. அதனை முன்னிட்டு படக்குழுவினர் இப்பாடலின் புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.