வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான முதல் டி20: இந்திய அணி அபாரம்!

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து நெற்று, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. .இந்தப் போட்டியில் ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரகளான சாய் ஹோப் மற்றும் காமில் பூரன் ஆகியோர் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். 12 ரன்கள் எடுத்த நிலையில் பூரன் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த வீரர்கள் இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனைத்தொடர்ந்து வந்த ரூதர்ஃபோர்ட், சாய் ஹோப்புடன் இணைந்து நிதானமாக அணியின் ஸ்கோரை உயர்ந்த்தினார். இந்த நிலையில் அரைசதம் கடந்த சாய் ஹோப் 37 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரூதர்ஃபொர்ட் 34 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவரி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்து. இந்திய அணி சார்பில் நமன் தீர் 3 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கலமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஞு சாம்சன் 11 ரன்களுக்கும், அபிஷேக் ஷர்மா 21 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளிதனர். இதனையடுத்து வந்த இஷன் கிஷ்ன் நிதானமாக ஆட, கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் அதிரடியாக ஆடி சதமடித்தார். 43 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 10 ஃபோர்களுடன் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதேபோல இஷன் கிஷன் 37 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த நிலையில் இந்தியா 14.1 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.