நாகை அருகே சொத்து தகராறில் தாயை கொலை செய்த இளைஞரை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த மருங்கூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வீரகாளி. இவர், திருப்பயத்தாங்குடி ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் மகன் ராஜூவுக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், இருவருக்கும் இடையே நேற்று மீண்டும் இதுதொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைநத் ராஜூ வீரகாளியை அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளார். அப்போது, அதனை தடுக்க முயன்ற வீரகாளியின் மனைவி தனபாக்கியத்தை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமுற்ற தனபாக்கியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த வீரகாளியின் மகன் முத்துப்பாண்டி, ராஜூவை கல்லால் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராஜூ அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து முத்துப்பாண்டியை காவல்துறையினர் கைது செய்தனர்.







