தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் பகுதி நேர உறுப்பினராக, ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்டது. முதலமைச்சரின் ஆலோசனை அமைப்பாக செயல்படும் இந்த குழு, மாநிலத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு பரிந்துரைகளை வழங்கி வருகிறது. இந்த குழுவில் பேராசிரியர் ஜெயரஞ்சன், சீனிவாசன், விஜயபாஸ்கர், சுல்தான் அகமது இஸ்மாயில், தீனபந்து, மல்லிகா சீனிவாசன், அமலோற்பவ நாதன், சிவராமன் நர்த்தகி, டி.ஆர்.பி ராஜா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா கடந்த மே 11 ஆம் தேதி தொழிற்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதனால் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. எழிலன் நாகநாதனை, மாநில திட்டக்குழுவின் பகுதி நேர உறுப்பினராக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
இதையும் படியுங்கள் : இந்திய கலாச்சாரத்தின் மீது காங்கிரசுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? – மத்திய அமைச்சர் அமித்ஷா கேள்வி
ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ எழிலன் நாகநாதன், நீட் விவகாரம், கூடங்குளம் உள்ளிட்ட பிரச்னைகளில் தீவிரமாக ஈடுபட்டு குரல் கொடுத்தவர். திராவிட இயக்க சிந்தனையாளரான இவர், மருத்துவம் பயின்றவர். எழிலன் நாகநாதனின் தந்தையான பேராசிரியர் நாகநாதன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர். இவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மாநில திட்டக்குழுவின் துணை தலைவராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.