ராமநாதபுரம் தேவஸ்தான புதிய அறங்காவலர்களாக ராணி ராஜேஸ்வரியின் மகள்கள் பதவியேற்பு!

ராமநாதபுரம் தேவஸ்தான புதிய அறங்காவலர்களாக ராணி ஆர்.பி.கே.ராஜேஸ்வரியின் மகள்கள் இருவர் பதவியேற்றுக்கொண்டனர். ராமநாதபுரம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலராக இருந்த சேதுபதி மன்னர்களின் வாரிசு ராணி ஆர்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியார், அப்பொறுப்புகளில் இருந்து விலகி தனது மகள்கள்…

ராமநாதபுரம் தேவஸ்தான புதிய அறங்காவலர்களாக ராணி ஆர்.பி.கே.ராஜேஸ்வரியின் மகள்கள் இருவர் பதவியேற்றுக்கொண்டனர்.

ராமநாதபுரம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலராக இருந்த சேதுபதி
மன்னர்களின் வாரிசு ராணி ஆர்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியார், அப்பொறுப்புகளில் இருந்து விலகி தனது மகள்கள் ராணி அபர்ணாவை ராமநாதபுரம் தேவஸ்தானம்
பரம்பரை அறங்காவலராகவும், ராணி அஸ்மிதாவை ராமநாதபுரம் சமஸ்தானம் சத்திரங்கள் பரம்பரை அறங்காவலராகவும் நியமித்துள்ளார்.

அவர்கள் இருவரும் அரண்மனை கோட்டைவாசல் விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதனையடுத்து பதவியேற்பு விழாவானது ராமநாதபுரம் அரண்மனை சமஸ்தான தேவஸ்தானம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இருவருக்கும் ராணி ஆர்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியார் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ராம்குமார், ராணியின் உறவினர்கள் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, ராணி லெட்சுமி நாச்சியார், மகாலட்சுமி நாச்சியார்,
வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி, எஸ்.கே.குமார், ராம்பிரசாத் துரை, முத்துராமலிங்கதுரை ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு அரண்மனை பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.