தாதா சாகேப் பால்கே விருது பெறுவதில் மகிழ்ச்சி : ரஜினிகாந்த்

தாதா சாகேப் பால்கே விருது பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். மத்திய அரசால் இந்திய திரையுலக பிரபலங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது.…

தாதா சாகேப் பால்கே விருது பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மத்திய அரசால் இந்திய திரையுலக பிரபலங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது. லதா மங்கேஷ்கர், அமிதாப் பச்சன், சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் உள்ளிட்ட பலருக்கு இந்த விருது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டுக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக விருது விழா நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்த விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு குடியரசுத் துணைத்தலைவர் நாளை (25 ஆம் தேதி) டெல்லியில் வழங்குகிறார்.

இதற்கிடையே, தனது போயஸ் கார்டர்ன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி காந்த், தாதா சாகேப் பால்கே விருது எனக்குக் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இந்த நேரத்தில் கே.பாலசந்தர் சார் இல்லையே என்று வருத்தமாக உள்ளது. இந்த விருதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.