இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,906 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த நான்கைந்து நாட்களாக தொற்று ஏற்ற இறக்கமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 15,906 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் மட்டும் 8,909 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாடு முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,75,468 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 16,479 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 3,35,48,605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைவோர் விகிதம் 98.17 % ஆக உள்ளது. இப்போது 1,72,594 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 561 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றுப் பாதிப்புக்கு ஒரே நாளில் 561 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,54,269 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 102.10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 77,40,676 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.







