செங்கம் அருகே அரசு மருத்துவமனைக்குள் புகுந்த நல்ல பாம்பு சீறி பாய்ந்ததால், நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அச்சமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியில் இயங்கி
வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினம்தோரும் சுற்றுவட்டாரப்
பகுதிகளிலிருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் திடீரென நல்ல பாம்பு ஒன்று மருத்துவமனையில் புகுந்ததால் மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பெற்று வரும் நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் அச்சமடைந்தனர். பின்னர் செங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் லாவகமாக நல்ல பாம்பை பிடித்து வனத்துறையில் விட்டனர்.
ரூபி.காமராஜ்







