தமிழகம் செய்திகள்

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளைக் கடத்தி சென்ற இருவா் கைது

தேனி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த இருவா், போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம் அருகே, கூடலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை  தமிழகத்தில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், கூடலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் பிச்சை பாண்டி தலைமையில் நடவடிக்கை எடுத்த போலீசார், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர்.

அப்போது அந்த வழியே வந்த கேரள மாநில அரசு பஸ்ஸில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான கேரள லாட்டரி சீட்டுகளை தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்த சாந்தி மற்றும் சின்னமனூரை சேர்ந்த முத்து ஆகிய இருவரும் விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்தது.  இதையடுத்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்களிடமிருந்து ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள 4500 லாட்டரி சீட்டுகளை கைப்பற்றி  இருவரையும்  சிறையில் அடைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கா. ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பழனி அருகே சாலையில் ஒற்றை காட்டு யானை – வாகன ஓட்டிகள் அச்சம்!

Web Editor

துப்பாக்கி குண்டு பாய்ந்த விவகாரம்: சிறுவன் உயிரிழப்பு

Halley Karthik

ஏடிஎம் கொள்ளை – நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக கிடைத்த முக்கிய குற்றவாளியின் புகைப்படம்

Web Editor