வேதாரண்யம் அருகே 300 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகளை திருச்சி மண்டல வன பாதுகாவலர் சதீஷ் மற்றும் வனத்துறையினர் கோடியக்கரை கடலில் வட்டனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் அரியவகை இனமான ஆலிவ்ரிட்லி ஆமை முட்டைகள் பொரிப்பகம் கோடியக்கரை வனத்துறை மூலம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை அக்கடற்கரை ஓரத்தில் ஆலிவ்ரிட்லி ஆமைகள் வந்து குழி தோண்டி முட்டையிடும் செல்வது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டும் ஆமைகள் கோடியக்கரை கடல் பகுதிக்கு வந்து முட்டையிட்டு சென்றது. அந்த முட்டைகளை நாய், நரி, சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாக்க ஆமை முட்டைகளை பாதுகாப்பாக எடுத்து பொரிப்பகத்தில் இந்த ஆண்டு கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறையில் 132 ஆமைகள் இட்டு சென்ற 14,322 முட்டைகள் எடுத்து வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இம்முட்டைகள் 45 நாட்கள் முதல் 60 நாட்களில் குஞ்சுகள் வெளிவரும். முட்டைகளிலிருந்து வெளிவந்த 300 ஆலிவ்ரிட்லி ஆமை குஞ்சுகளை திருச்சி மண்டல வன பாதுகாவலர் சதீஷ் மற்றும் வனத்துறையினர் கோடியக்கரை கடலில் விட்டனர்.
அனகா காளமேகன்