வருங்கால குழந்தைகளின் உணவு எதிர்காலம் என்கிற தலைப்பில் திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்டவன் கலை & அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சிறுதானிய உணவு கண்காட்சி நடைபெற்றது.
நாளுக்கு நாள் உணவு கலாச்சாரம் முற்றிலும் மாறி வரும் நிலையில் ஆரோக்கியமான உணவைத் தேடி செல்ல வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் இன்றைய தலைமுறையினருக்கு உள்ளது .குறிப்பாக இன்றைய தலைமுறையினர் மற்றும் வருங்கால இளைய தலைமுறையினராக மாற உள்ள குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வை ஆரம்ப நிலையில் ஏற்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், சிறுதானிய உணவு குறித்தும் அதன் பயன்கள் குறித்தும்விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறு தானிய உணவு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அடுத்த கட்டமாக பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு சென்று சிறுதானிய உணவுகளின் சிறப்புகளையும், பயன்களையும் எடுத்துரைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரி முதல்வர் பிச்சைமணி கண்காட்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு, வாழ்த்து கூறியதோடு விழிப்புணர்வோடு சிறுதானிய உணவை எப்படி சந்தைப்படுத்த வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா