நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: வனத்துறை அலுவலர்கள் உறுதிமொழியேற்பு!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியஸ் 7 தமிழ் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் வனத்துறை அலுவலகத்தில் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது. சர்வதேச பெண்கள் தினத்தை…

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியஸ் 7 தமிழ் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் வனத்துறை அலுவலகத்தில் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் வனத்துறை அலுவலம்:

பெரம்பலூர் வனத்துறை அலுவலகத்தில் வன அலுவலர் குகனேஷ் தலைமையில் நிகரென விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வனத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் பாலின சமத்துவ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வலியுறுத்தும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் வனத்துறை அலுவலர்களுடன் சேர்ந்து விவசாயிகளும் கையொப்பமிட்டனர்., இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் வன காவலர் பழனி குமரன் சமூகக்காடு வனச்சரகர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம்:

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் நியூஸ் 7 தொலைக்காட்சி இணைந்து அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களோடு, பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்வு, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வலியுறுத்தும் நடைபெற்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்திலும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

குத்துஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி:

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் உள்ள குத்துஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நிகரணக் கொள் பாலின சமத்துவம் விழிப்புணர்வு உறுதிமொழி பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. குத்தூஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு உறுதிமொழியை 250 மாணவ மாணவியர்கள் உறுதிமொழி ஏற்று,கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டனர்.

மேல்பள்ளிப்பட்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு அரசினர் ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில், நியூஸ்7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் “நிகரென கொள்” உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, பள்ளியின் முதல்வர் (பொறுப்பு) கேசவன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வலியுறுத்தும் நடைபெற்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்திலும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.