மலையாள சினிமாவில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் பட்டையை கிளப்பிய எஸ்.ஜே.சூர்யா, மலையாள சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம்…

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் பட்டையை கிளப்பிய எஸ்.ஜே.சூர்யா, மலையாள சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். சமீபத்தில் அவர் வில்லனாக நடித்த மாநாடு, மார்க் ஆண்டனி மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களும் வெற்றி பெற்று அவரின் நடிப்பு பெரிதாக சிலாகிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழில் அவருக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருக்கும் நிலையில் இப்போது மலையாள சினிமாவில் அறிமுகமாக உள்ளார். மலையாள நடிகர் சுரேஷ் கோபி நடிக்கும் 251வது படத்தில் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகராக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா இப்போது இந்த படம் மூலம் மலையாள சினிமாவிலும் அறிமுகமாகிறார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.