சிவசங்கர் பாபாவின் பக்தைகளுக்கு முன்ஜாமீன்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபாவின் பக்தைகள்  5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு நேரடி தொடர் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபாவின் பக்தைகள்  5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு நேரடி தொடர் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டதில் உள்ள கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த சுஷில் ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது குற்றம் சுமத்தப்பட்டதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது.  செய்தி அறிந்த சிவசங்கர் பாபா தலைமறைவானார். இந்நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சிபிசிஐடி காவல்துறையினர் சிவசங்கர் பாபாவை டெல்லியில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சிவசங்கர் பாபவிற்கு உதவிய பக்தை சுஷ்மிதா கைது செய்யப்பட்டார். மேலும் நிர்வாகி ஜானகி சினிவாசன், பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா வெங்கடராமன், பக்தைகள் கருணாம்பிகை, திவ்யா, பாரதி ஆகியோரை காவல்துறையினர் தேடி வந்தனர். பக்தைகள் ஐந்து பேரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் இன்று நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளில் முன்ஜாமீன் கோரியுள்ள ஐவருக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை எனக் கூறி, ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.