முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 3,715 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 3,715 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 28 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,715 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றில் இருந்து 4 ஆயிரத்து 29 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 32 ஆயிரத்து 17 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,059 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். 431 பேர் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். ஈரோட்டில் 330 பேருக்கும் சேலத்தில் 233 பேருக்கும் கோவையில் 436 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கோவில்களில் சாதிய பாகுபாடு கடைபிடிக்க கூடாது: எம்எல்ஏ சிந்தனை செல்வன்

Vandhana

“என்ஞாயி எஞ்ஞாமி” இசைநாயகனுக்கு பிறந்தநாள்!

Vandhana

சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Ezhilarasan