சைடிஸ் இலவசம் ஆனால், மதுபானத்தின் விலை கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாகவும், அதை காவல்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதிகளில் 22 டாஸ்மார் மதுபான விற்பனை கடைகள் உள்ளது. இதில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்கள் விற்க அனுமதி உள்ளது. ஆனால் அதற்குப் பக்கத்திலேயே மது குடிப்பவர்கள் மது அருந்துவதற்கு மது அருந்தும் கூடம் உள்ளது. இவற்றில் கள்ளத்தனமாக அதிகாலையிலிருந்தே காரைக்குடி பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் மதுபானம் கிடைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், காவல்துறை ஒத்துழைப்புடன் அமோக மாக மது விற்பனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதில் மதுக் குடிக்கு வரும் மதுபிரியர்களுக்கு சைடிஸ் இலவசமாக வழங்கப்படுவதாகவும், மதுவுக்குக் கூடுதலாக விலை வசூல் செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால், அந்த பகுதிகளில் ஏராளமானோர் எவ்வித அச்சமும் இன்றி மது அருந்தி வருகின்றனர்.








