திகார் சிறையில் மணீஷ் சிசோடியா மிக மோசமான கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாக ஆத்ம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சிபிஐ அதிகாரிகளால் கடந்த பிப்ரவரி 26ம் தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 5 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, சிசோடியாவின் சி.பி.ஐ. காவல் 2-வது முறையாக 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிசோடியாவின் காவல் முடிவடைந்த நிலையில், அவரை டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று ஆஜர்படுத்தினார்கள். அப்போது, சிசோடியாவுக்கு 20ம் தேதி வரை சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அண்மைச் செய்தி : அடுத்தடுத்து பாஜகவில் இருந்து தொடர்ந்து விலகும் நிர்வாகிகள்..!
இந்நிலையில் மணீஷ் சிசோடியா கொலை குற்றம்புரிந்த கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவரைக் கொல்வதற்கு சதி நடப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், மணீஷ் சிசோடியாவை சிறையின் விபாசனா அறையில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது. நீதிமன்றத்தின் அனுமதி இருந்தபோதிலும், சிறை எண் 1ல் குற்றவாளிகளுடன் சிசோடியா வைக்கப்பட்டுள்ளார். இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்,