முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

121 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் செல்லும் நீச்சல் வீராங்கனை!

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 1900-ம் நூற்றாண்டிலிருந்து கலந்துகொண்டு வந்தாலும், 121 ஆண்டுகளில் நீச்சல் போட்டியில் முதல் முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள வீராங்கனை என்ற சாதனைப்படைத்துள்ளார் மானா பட்டேல்.

குஜராத்தைச் சேர்ந்த 21 வயதான மானா பட்டேல் தன்னுடைய 7 வயதிலேயே நீச்சல் பயிற்சியைத் தொடங்கியவர். தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் , 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேசியளவிலான நீச்சல் போட்டியில் முந்தைய சாதனையை முறியடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். அதே ஆண்டு ஒலிம்பிக் கோல்டு க்யூஸ்ட் போட்டியில் கலந்துகொண்ட முதல் இந்தியர் என பாராட்டப் பெற்றார். அதேபோல் 2018-ம் ஆண்டு நடைபெற்ற 72-வது சீனியர் தேசிய நீச்சல் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களைப் பெற்று சாதனைப்படைத்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் பிரிவில் கலந்துகொள்ளும் முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திர சாதனையைப் படைத்துள்ளார் மானா படேல். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றுள்ளார்.

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் பிரிவில் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் கலந்துகொள்கிறார் மானா படேல். தோள்பட்டை காயத்தால் பாதிக்கப்பட்ட மானா படேல் கொரோனா ஊரடங்கில் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார்.

“கொரோனா ஊரடங்கில் நீச்சல் குளங்கள் மூடப்பட்ட நிலையில் நீச்சல் பயிற்சிகளை மேற்கொள்வது கடினமாக இருந்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இதுவெறும் தொடக்கம்தான், சவால்களே இதன்பிறகுதான் உள்ளது” என்கிறார் மானா படேல்.

 

Advertisement:
SHARE

Related posts

இங்கிலாந்தை மிரட்டும் புதியவகை கொரோனா; இந்தியாவில் இன்று அவசர கூட்டம்!

Jayapriya

மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு

Halley karthi

இந்தியாவிற்கு உதவிக் கரம் நீட்டிய ஆப்பிள் நிறுவனம்!

Niruban Chakkaaravarthi