அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக மாநில இணைச் செயலாளர் வையாபுரி தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என மாநில செயலாளர் அன்பழகன் நேற்று சென்னையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது மாநில இணைச் செயலாளர் வையாபுரி மணிகண்டன் அதிமுகவினருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பதிவி ஏற்க வேண்டும் என அனைத்து நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-ம.பவித்ரா







