பஞ்சாப் மாநிலத்தில் பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் தலைமறைவாகியிருந்த 2 ரவுடிகளை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாத இறுதியில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக ஏற்கெனவே 5க்கும் மேற்பட்டோரை பஞ்சாப் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மூஸ் வாலாவின் கொலை வழக்கில் 2 பேர் தலைமறைவாக இருப்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர். மண்ப்ரீத் சிங், ஜக்ரூப் சிங் ஆகிய அந்த 2 ரவுடிகளும் அமிருதசரஸ் மாவட்டத்தில் அட்டாரி எல்லை அருகே உள்ள கிராமத்தில் ஒரு பண்ணை வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அவர்களை கைது செய்வதற்காக போலீஸார் சென்றனர். போலீஸார் வருவதை அறிந்த ரவுடிகள் துப்பாக்கியால் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினர். இதையடுத்து, போலீஸாரும் திருப்பிச் சுட்டனர்.
நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை முடிவில் 2 ரவுடிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த ஏகே-47 ரக துப்பாக்கியும், 30 மிமீ கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது என்று ரவுடிகளுக்கு எதிராக சிறப்பு அதிரடிப் படை கூடுதல் டிஜிபி பிரமோத் பேன் தெரிவித்தார்.