முக்கியச் செய்திகள் தமிழகம்

சிலம்பம் அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்கு கிடைத்த பெருமை: அமைச்சர் மெய்யநாதன்

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்கு பெருமை என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் விளையாட்டை பாதுகாக்கவும், அதனை உலகறியச் செய்யவும், ஒன்றிய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப்பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அந்த கோரிக்கையை ஏற்று, ஒன்றிய அரசு புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிலம்பம் விளையாட்டை அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளது என்றும் அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்து சிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய விளையாட்டு ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 1,559 பேருக்கு கொரோனா

Halley karthi

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையாக வாதிடவில்லை : திருமாவளவன்

Ezhilarasan

அடக் கொடுமையே.. முன்னாள் காதலியை பார்க்கச் சென்றவருக்கு இப்படி ஒரு சிக்கல்!

Gayathri Venkatesan