முக்கியச் செய்திகள் தமிழகம்

பழவேற்காட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை : எல்.முருகன்

விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுவது போன்று மீனவர்களுக்கும் வழங்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் கால்நடை மீன்வளம் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மீனவர்களிடம் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம், பழவேற்காடு ஏரியில் உள்ள முகத்துவாரம் நிரந்தரமாக தூர்வாரிட வேண்டும். அதானி துறைமுகம் விரிவாக்க பணி களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மீனவர்கள் மனுக்களை அளித்தனர்.

பின்னர் மீனவர்களிடம் கலந்துரையாடலில்இணை அமைச்சர் எல் முருகன் பேசுகையில், காசிமேட்டில், அனைத்து வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம் சீரமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும், மத்திய மாநில அரசுகளுடன் பேசி, பழவேற்காட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடல்பாசி பூங்கா அமைக்கப் படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மீனவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எல். முருகன் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

வைரலாகும் விராட், அனுஷ்கா குழந்தையின் புகைப்படம்!

Ezhilarasan

பசியாற்றும் பிட்சா ஹீரோ!

Vandhana

கர்ப்பிணி பூனையைக் காப்பாற்றிய 4 பேர்: மன்னர் கொடுத்த ஆச்சரிய பரிசு

Gayathri Venkatesan