முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐ.பி.எல். திருவிழா இன்று மீண்டும் தொடக்கம்: துபாயில் சென்னை-மும்பை அணிகள் மோதல்

கொரோனாவால் தடைபட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் இன்று முதல் தொடங்குகின்றன. இன்று நடக்கும் முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன.

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் 9- ஆம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் சில வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மே 3- ஆம் தேதியுடன் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டன. இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று  முதல் தொடங்குகின்றன.

இதில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தோனி தலைமை யிலான சென்னை சூப்பர் கிங்சுடன் போட்டியிடுகிறது. துபாயில் இந்தப் போட்டி நடக்கி றது. புள்ளி பட்டியலில் 5 வெற்றி, 2 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் முதலிடத்துக்கு முன்னேறும்.

சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து ஆல்- ரவுண்டர் சாம் கர்ரனுக்கு 6 நாள் தனிமைப்படுத்துதல் நிறைவடையாததால் அவர் இன்று களம் இறங்குவது சந்தேகம். பாப் டு பிளிஸ்சிஸ் காயத்தில் இருந்து குணமடையாததால் அவரும் இன்று ஆடுவது சந்தேகமே. சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, அம்பத்தி ராயுடு ஆகியோர் வலுவாக இருக்கிறார்கள். பந்துவீச்சில் தீபக் சாஹர், தாகூர் தங்கள் திறமையை காட்டு வார்கள் என்று நம்பலாம்.

மும்பை அணி 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் பொல்லார்ட், டி காக், கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் என அனைத்து முன்னணி பேட்ஸ்மேன்களும் சிறப்பான பாமில் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா, போல்ட், ராகுல் சாஹர் என அந்த அணி அனைத்து விதத்திலும்மிரட்டலாக இருக்கிறது. இதனால், இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இரு அணிகளின் உத்தேச பட்டியல் :

சென்னை: தோனி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, பிராவோ, ஷர்துல் , தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், நிகிடி அல்லது ஹசில்வுட்.

மும்பை: ரோகித் சர்மா (கேப்டன்), குயின்டான் டி காக், சூர்யகுமார், இஷன் கிஷன், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, நாதன் கவுல்டர்-நிலே, ராகுல் சாஹர், போல்ட், பும்ரா.

Advertisement:
SHARE

Related posts

தொடர்ச்சியாக குட்டிக்கரணம் அடித்து சாதனை படைத்த சிறுவன்!

Jayapriya

மலேசியாவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 200 பேர் காயம்!

Halley karthi

கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தவுள்ளேன்: லியோனி 

Ezhilarasan