நடிகை நயன்தாரா, ட்ரீம் வாரியர் தயாரிக்கும் படத்தில் இருந்து விலகியதை அடுத்து, அவர் நடிக்க இருந்த கேரக்டரில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.
நடிகை நயன்தாரா, ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியா கின. இதில் விஜய் சேதுபதி, ராம்போ என்ற ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஊந்திரன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். சமந்தா கதீஜா என்ற பெயரிலும் நயன்தாரா, கண்மணி என்ற பெயரிலும் நடிக்கின்றனர். இந்தப் படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
இதையடுத்து, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இதற்கிடையே ட்ரீம் வாரியர் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி இருந்தார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்னேஷ் இயக்கும் படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் நடந்து முடிந்துவிட்டது.
இதையடுத்து ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கும் படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமானார். இவர், போட்டா போட்டி, தெனாலிராமன், எலி படங்களை இயக்கி யவர். இரண்டு படங்களுக்கும் சேர்த்து நடிகை நயன்தாராவுக்கு ரூ.11 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு படத்துக்கான சம்பளத்தை அவர் திருப்பிக் கொடுத்துவிட்டு அதில் இருந்து விலகிவிட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் விலகியதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. அவர் கேரக்டரில், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருக்கிறார் என படக்குழு தெரிவித்துள்ளது.









