முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்: முதலமைச்சர் அறிவுறுத்தல்

மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கும், சரக்குகளை எடுத்துச் செல்லும் வகையிலும்
சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று  நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

​நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலைப் போக்குவரத்து மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கும், சரக்குகளை மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் வகையிலும் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

நெடுஞ்சாலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், புதிய சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்துதல், உறுதிப்படுத்துதல், புதுப்பித்தல், பராமரித்தல், புறவழிச் சாலை / சுற்றுச்சாலை அமைத்தல், புதிய பாலங்களை கட்டுதல், பழைய பாலங்களை சீரமைத்தல், உயர்மட்ட மேம்பாலம் கட்டுதல், சாலையின் இருபுற ஓரங்களிலும் மரக்கன்றுகளை வளர்த்தல் போன்ற திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

​நெடுஞ்சாலைத் துறையின் பல்வேறு அலகுகளில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், வருங்காலங்களில் மேற் கொள்ளப்படவுள்ள பணிகள் முறையாக திட்டமிட்டு, விரைவாக முடிக்கப்பட வேண்டும் எனவும், சாலைப் பணிகளின்போது இதர அரசு துறைகளுடன் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு இடையூறுகளின்றி மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

​மேலும், நெடுஞ்சாலைத்துறையில் பன்னாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்தும், ஒன்றிய அரசின் நிதி மூலம் செயல்படுத்தப்படும் பணிகளான உயர்மட்ட சாலைகள் அமைத்தல், புறவழிச்சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

​நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் பணிகளான துறைமுகங்களை நிர்வகித்தல், கட்டுப்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேலாண்மை செய்தல், சிறுதுறைமுகங்களில் சரக்குகளைக் கையாளுதல், பயணிகள் படகு போக்குவரத்து, கன்னியாகுமரி – விவேகானந்தர் பாறையில் படகு தோணித்துறை நீட்டிப்பு குறித்தும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

​இந்த கூட்டத்தில், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச் சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன்,நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ். சிவசண்முக ராஜா, தமிழ்நாடு கடல் சார் வாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் கே. பாஸ்கரன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-II திட்ட இயக்குநர் B.கணேசன், நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்கு நர்  பி.ஆர்.குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“பொள்ளாச்சி தனி மாவட்டமாக மாற்றப்படும்” – டிடிவி.தினகரன்!

Halley Karthik

ஹெலிகாப்டர் விபத்து எனப் பரவிய தகவல்; மாவட்ட ஆட்சியர் விளக்கம்

Arivazhagan Chinnasamy

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு; விரைவில் விசாரணை

G SaravanaKumar