முக்கியச் செய்திகள் இந்தியா

நீட் தேர்வு மையம் பற்றிய தகவல்களை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அவர்களுக்கான மையம் பற்றி தெரிந்துக்கொள்ள தகவல்களை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை.

வரும் செப்டம்பர் 12ல் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான தேர்வு மையம் பற்றிய தகவலை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதப் போகும் மையம் பற்றிய தகவலை https://neet.nta.nic.in/ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், OMR தாளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது பற்றிய தகவலையும் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதப் போகும் மையம் பற்றிய தகவலை முன்கூட்டியே அறிந்துகொள்ள தேசிய தேர்வு முகமை ஏற்பாடு செய்துள்ளதாகவும், தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

முன்னதாக தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வை எழுத கடந்த ஆண்டில் 1,21,617 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,12,890 ஆக சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பு வாக்காளர் தகவல் சீட்டு: தேர்தல் அதிகாரி

Halley karthi

டெல்லி அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி!

Ezhilarasan

நெல் கொள்முதல் நிலையங்கள்: மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு

Saravana Kumar