உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலால் அங்கு மருத்துவ கட்டமைப்புகள் முழுவதும் சேதமடைந்துள்ளதால், நோயாளிகளுக்கு வழங்க, மருந்து மாத்திரைகள் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய முதல்நாள் போரிலேயே சுமார் 137 உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர், 316 பேர் காயமடைந்தனர். மேலும், 10,000-க்கும் மேற்பட்டோர் நாட்டைவிட்டு இடம்பெயர்ந்தனர். முதல்நாளிலேயே பேரிழப்பைச் சந்தித்திருந்தாலும் ரஷ்யாவின் ஐந்து போர் விமானங்களையும், ஒரு ஹெலிகாப்டரையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.
இரு நாடுகளும் ஒருவருக்கொரும் தாக்குதல் நடத்திய நிலையில், உக்ரைனுக்கே பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ராணுவ பலம் வாய்ந்த ரஷ்யா போர் விமானங்கள் மூலமாகவும் ரகசிய தாக்குதல்களிலும் ஈடுபட்டதால், உக்ரைன் உருக்குலைந்து போனதோடு, மீண்டு வர போராடுகிறது.
இந்நிலையில், ரஷ்யா நடத்திய தாக்குதால், உக்ரைனில் உள்ள மருத்துவ கட்டமைப்பு சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாமலும், கேன்சர் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க முடிவதில்லை என்றும், தேவையான மருந்து மாத்திரைகள் வழங்க முடியாமலும் உக்ரைன் தவித்து வருகிறது.
போரில் உடமைகளை இழந்த உக்ரைனுக்காக இங்கிலாந்தில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காணொலி மூலம் பேசிய அதிபர் செலன்ஸ்கி, ரஷ்யா நடத்திய கொடூர தாக்குதலால் 400-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார். தற்போது, கிழக்கு உக்ரைனில் போர் உக்கிரமாக நடைபெற்று வருவதாக கூறிய அவர், அங்குள்ள மக்களுக்கு சாதாரண மாத்திரைகள் வழங்குவதற்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.
Advertisement: