23 வகையான சான்றிதழ்களுக்கு பத்து மடங்கு கட்டண உயர்வை அமல்படுத்தி அண்ணா பல்கலைக்கழகம் திடீரென அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தரம் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்து போனால், புதிய சான்றிதழ் வாங்குவதற்கான கட்டணத்தை ரூ.300-ல் இருந்து ரூ.3,000 ஆக அண்ணா பல்கலைக்கழகம் உயர்தியுள்ளது. அதோடு பட்டம் பெற்ற சான்றிதழ் தொலைந்துவிட்டால், புதிய சான்றிதழ் பெறுவதற்கான கட்டணமும் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது முறையாக சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ரூ.10,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது..
இந்த புதிய கட்டண உயர்வு, கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 18% GST வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது.
Advertisement: