உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற ஒரே வீராங்கனை!

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை யஷஸ்வினி சிங் தேஸ்வால் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 238.8 புள்ளிகள் பெற்று தங்கம் பதக்கம் வென்றுள்ளார். புதுடெல்லி மாநிலத்தை சேர்ந்தவர் யஷஸ்வினி சிங்…

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை யஷஸ்வினி சிங் தேஸ்வால் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 238.8 புள்ளிகள் பெற்று தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.

புதுடெல்லி மாநிலத்தை சேர்ந்தவர் யஷஸ்வினி சிங் தேஸ்வால். உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இறுதி பிரிவில் 238.8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட எட்டு இந்திய வீராங்கனைகளில் யஷ்ஸ்வினி மட்டுமே தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் கலந்துகொண்ட முன்னணி வீராங்கனை மனு பாகர் 236.7 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்கள் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவை சேர்ந்த சவுரப் சவுத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.


யஷஸ்வினி சிங் தேஸ்வால் தந்தை எஸ்.எஸ்.தேஸ்வால், இந்தோ-திபெத்திய எல்லை ஐபிஎஸ் அதிகாரியாகவும், தாய் சரோஜ் தேஸ்வால் பஞ்ச்குலாவில் வருமான வரி தலைமை ஆணையராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.