அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் வெஸ்ட் சிக்ஸ்த் தெரு பகுதில் கடந்த ஞாயிற்று கிழமை மர்ம நபர் ஒருவர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 4 பேர் உயிழந்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதல் இந்திய வம்சாவளியை சேர்ந்த சவிதா சண்முகசுந்தரம் என்கிற 21 வயது மாணவியும் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அமெரிக்காவாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நிடியாகா டியாக்னே (53) என்பவரை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். இவர் செனீகல் நாட்டில் இருந்து குடியேறி அமெரிக்க குடியுரிமைப் பெற்றவராவார்.
சவிதா சண்முகசுந்தரம்
துப்பாக்கி சூடு தாக்குதலில் உயிரிழந்த சவிதா சண்முகசுந்தரம் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படித்து வந்துள்ளார். ஆஸ்டின் பகுதியைச் சேர்ந்த இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராவார். “சவிதா, ஆஸ்டின் மெக்காம்ப்ஸ் வணிகப் பள்ளியின் சூப்பர் ஸ்டார் மாணவிகளில் ஒருவர்” என்றும் “அவரை இழப்பது முற்றிலும் வேதனையானது” என்றும் அப்பள்ளியின் உதவிப் பேராசிரியரான ரஸ் ஃபின்னி கூறியுள்ளார்.








