கராச்சியில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் தலைநகர் குவெட்டாவுக்கு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, கலாட் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் பயணிகள் பேருந்து மீது நடத்திய தாக்குதலில் பரிதாபமாக 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.
மேலும் இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை என தெரியவந்துள்ளது. உடனடியாக சூழ்நிலையை சமாளிக்க பாதுகாப்பு ஏஜென்சிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மீட்பு குழுக்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.
இந்நிலையில் பாதுகாப்புபடை வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடிவருகின்றனர்.








