டெல்லி மெட்ரோ ரயிலில் பெண் ஒருவர் ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் கருவி கொண்டு சிகை அலங்காரம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய அவசர உலகில் பெண்களும் வேலைக்கு சென்றதால் குடும்பத்தை சீராக கொண்டு செல்ல முடியும் என்ற கருத்து பலரது மத்தியிலும் பேசுபொருளாக இருந்து வருகிறது. வேலைக்கு செல்லும் பெரும்பாலான பெண்கள் தங்களது குடும்பத் தேவைகளை நிறைவேற்றி விட்டு, அவசர அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பி பேருந்திலோ, ரயிலிலோ, ஆட்டோவிலோ பயணம் செய்யும் போதுதான் தன்னை அழகுபடுத்தி கொள்வது, சாப்பிடுவது என்று தங்களுடைய தேவைகளை செய்வார்கள். அப்படி பேருந்துகளில் செல்லும் போது சில பெண்கள் பூக்கட்டுவதை பார்த்திருப்போம். ரயிலில் செல்லும் போது சில பெண்கள் கீரைகள் கிள்ளுவது, சாப்பிடுவது, தலை சீவுவது போன்றவற்றை பார்த்திருப்போம்.
ஆனால் மெட்ரோவில் பயணம் செய்பவர்களுக்குகென்று சில விதிகள் கடைபிடிக்கப்படுகிறது. அதை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும். இருந்து இது எதைப்பற்றியும் கவலை படாமல் டெல்லி மெட்ரோவில் ஒரு பெண் சிகை அலங்காரம் செய்யும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.,
மெட்ரோவைப் பயன்படுத்தும் அனைவருக்கும், மெட்ரோவில் சில பிளெக் பாயிண்டுகள் உள்ளன. அவை பெரும்பாலும் அவசர தேவைகளுக்காக அதாவது செல்போன் மற்றும் லேப்டாப்பை சார்ஜ் செய்துகொள்வதற்காக வைக்கபப்ட்டுள்ளன.
அந்த பிளெக் பாயிண்ட் மூலம் டெல்லி மெட்ரோவில் பயணித்த பெண் ஒருவர், தான் கொண்டு வந்த ஹேர் ஸ்டிரைட்டனிங் கருவியை அங்கிருந்த பிளெக் பாயிண்சொடில் சொருகி தனது முடியை ஸ்ட்ரெயிட்னிங் செய்துள்ளார். அவரைச் சுற்றி பலர் இருக்கும் நிலையில், அவர்களைப் பற்றி எல்லாம் அந்தப் பெண் சிகை அலங்காரம் செய்தது அருகில் இருந்தவர்களை ஆச்சரியபடுத்தியது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த பெண் செய்த இந்த செயலை பலரும் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
https://twitter.com/HasnaZarooriHai/status/1670119257215238145?s=20
இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் மெட்ரோ அட்ராசிட்டி எனவும், பொது சொத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும், டெல்லி மெட்ரோவில் கட்டுப்பாடுகளை மீறி எல்லாவற்றையும் செய்து வருகிறார்கள் என்றும் பலரும் பலவிதமான விமர்சனங்களை முன்வைத்தும் மற்றும் சிலர் அந்த பெண்ணின் சூழ்நிலை என்னவென்று தெரியாமல் விமர்சனம் செய்யாதீர்கள் என்று ஆதரவாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் டெல்லி மெட்ரோவில் பயணிகள் மத்தியில் ஒரு ஜோடி முத்தம் கொடுத்து கொண்ட நிகழ்வு வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த பெண் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









