ஆம்லெட் பிரியர்களுக்கு ஷாக்… முட்டை விலை கிடுகிடு உயர்வு!

சென்னையில் ஒரு முட்டை ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுவதால் ஓட்டல்களில் முட்டை உணவுகளின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள்…

சென்னையில் ஒரு முட்டை ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுவதால் ஓட்டல்களில் முட்டை உணவுகளின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.  நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழ்நாட்டின் சத்துணவு திட்டத்திற்கும், கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

அந்த வகையில்  முட்டை கொள்முதல் விலை ரூ.5.65 இருந்த நிலையில் 5 காசுகள் உயர்ந்து ரூ.5.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிர், தமிழ்நாடு, கேரளத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் கொண்டாட்டம் காரணமாக நாமக்கல்லில் டிச.25-ம் தேதி மொத்த விற்பனை சந்தையில் முட்டை விலை ₹5.80 ஆக உயர்ந்தது.

இதையும் படியுங்கள்:  விருதுகளை திருப்பியளிக்கும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!

நாமக்கல் சில்லரை விலைகளில் ரூ.6 முதல் ரூ.6.50 காசுகள் வரையிலும், சேலம் மாவட்டத்தில் சில்லரை கடைகளில் ஒரு முட்டை ரூ.7-க்கு விற்பனை ஆகிறது.  இதனைத் தொடர்ந்து சென்னையிலும் ஒரு முட்டை விலை ரூ.7 முதல் ரூ.7.50 காசுகள் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவன பொருட்களான மக்காச்சோளம், சோயா ஆகியவற்றில் விலை உயர்ந்துள்ளதும், பண்ணைகளில் தற்போது முட்டை உற்பத்தி குறைவாக இருப்பதும் முட்டை விலை உயர்விற்கான முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

முட்டை விலை மேலும் அதிகரித்தால் ஓட்டல்களில் முட்டை சார்ந்த உணவு பொருட்களான ஆம்லெட், முட்டை பரோட்டா உள்ளிட்டவைகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.