சிவாச்சாரியார்கள், பட்டாச்சார்யர்களுக்கு கோயில்களில் அர்ச்சனை செய்ய சட்ட உரிமை இருக்கிறது – வழக்கறிஞர் பேட்டி

சிவாச்சாரியார்கள், பட்டாச்சார்யர்களுக்கு கோயில்களில் அர்ச்சனை செய்ய சட்ட விதிகளில் உரிமை இருக்கிறது என அர்ச்சகர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அரசின் விதிகள் செல்லும் என சென்னை…

சிவாச்சாரியார்கள், பட்டாச்சார்யர்களுக்கு கோயில்களில் அர்ச்சனை செய்ய சட்ட விதிகளில் உரிமை இருக்கிறது என அர்ச்சகர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அரசின் விதிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அரசின் விதிகளை எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர் வள்ளியப்பன் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆதி சைவ சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் தரப்பில் ஆஜராகி உள்ளதாக கூறினார்.

 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் விதிகளுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் ஆஜரானோம். தீர்ப்பின்படி , குழு நியமித்து அனைத்து கோயில்களின் ஆகமத்தை அந்த குழுவினர் ஆராய்வார். அரசின் Servive rules விதிகளான 7 மற்றும் 9 ன் மூலம் ஆகம விதிக் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசு உத்தரவு பொருந்தாது என கூறினார்.

 

சேஷம்மாள் , ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்கினையும் நீதிபதி இன்று சுட்டிக் காட்டியதாக கூறிய அவர், அரசியலமைப்பு சட்ட விதிகள் 16,25,26 சிவாச்சாரியார், பட்டாச்சார்யர்களுக்கு கோயில்களில் அர்ச்சனை மேற்கொள்ள உரிமை இருப்பதை கூறுகிறது என்றார். ஆகம கோயில்களில் 32 பேர் விதிகளை மீறி நியமனம் செய்யப்பட்டுள்ளதை தனித்தனியாக வழக்கு தொடர்ந்து நீதி தேடி கொள்ளலாம் என்று நீதிபதி கூறியதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.


ஆகமம் இல்லாத கோயில்களுக்கே அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் பொருந்தும். இந்தியாவில் தமிழ்நாடு கோயில்களில் மட்டுமே ஆகமம் பின்பற்றப்படுகிறது. சிவ ஆகமம் 28 வகை, சிவன் கோயில்களில் ஆதி சைவர் மட்டுமே பூஜிக்க முடியும். சிவன், பெருமாள் கோயில்களில் சிவாச்சாரியார், பட்டாச்சார்யர்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் முறைப்படி அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள 32 கோயிலிலுமே ஆகமம் பின்பற்றப்படுகிறது.

 

அந்த கோயில்களில் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் அர்ச்சகர் வேலையை இழந்துள்ளனர். ஆகமம் பின்பற்றப்படாத கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதில் தடையில்லை. ஆகமம் பின்பற்றப்படும் அனைத்து கோயில்களும் அரசர்கள் கட்டியது, கோயில்களில் வரும் உண்டியல் பணம் அரசுக்குதான் போகிறது. அர்ச்சகர்கள் யாரும் பணத்தை எதிர்பார்த்து பூஜையில் ஈடுபடுவதில்லை. சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் இந்த ஆகமத்திற்குள் வர மாட்டார்கள். தீட்சிதர்களுக்கு என தனி விதிகள் உள்ளன என்றார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.