சிவசேனா கட்சி மற்றும் சின்ன விவகாரம் தொடர்பாக உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனு மீது நாளை பிற்பகல் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் தனது கட்சிக்கு எதிராக திரும்பினார். சில எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்து கூட்டனி அமைத்து பாரதிய ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் பிறகு சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சின்னமான வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தன் பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.
உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று வாதத்தை முன்வைத்தது. இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவ சேனா கட்சியின் பெயரையும் வில், அம்பு சின்னத்தையும் ஒதுக்கி உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயகரீதியிலானது அல்ல எனவே சிவசேனா கட்சி மற்றும் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க கோரியிருந்தனர்.
இதையும் படியுங்கள் : டிவிட்டரில் புளூடிக்கை இழந்த சிவசேனா கட்சி – இணைய சேவையும் நிறுத்தம்
இந்த மனுவை அவசர விசாரணைக்கு பட்டியலிட கோரி தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு நேற்று முறையிடப்பட்டது. இந்த மனு உரிய நீதிமன்ற வழிமுறைகளை பின்பற்றப்படவில்லை எனவும் உரிய வழிமுறைகளை கடைபிடித்து முறையிடும்படியும் தலைமை நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், உத்தவ் தாக்ரே தரப்பில் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வழக்கை
அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முறையிட்டார். குறிப்பாக இந்த
வழக்கில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கு தடை விதிக்கப்படவில்லை
என்றால் சின்னம், வங்கி கணக்குகள் மற்றும் தகுதி நீக்கம் போன்ற நடவடிக்கைகளை
ஏக்நாத் ஷிண்டே அணி எடுக்க நேரிடும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : வரும் 25-ம் தேதி மாலையுடன் வெளிமாவட்டத்தினர் வெளியேற வேண்டும்- தேர்தல் அலுவலர் உத்தரவு!
இந்த மனு குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு இன்று வேறு வழக்குகளை விசாரிப்பதால், அதற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என தெரிவித்ததோடு, உத்தவ் தாக்கரே தரப்பு தொடர்ந்த வழக்கை நாளை பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.
– யாழன்